Monday, May 28, 2012

நீயா நானா.. சரிதானா??

நீயா நானா.. சரிதானா?? நீயா நானா, என்பது பொது விவாத நிகழ்ச்சியா? இல்லை ஒருதலைபட்சமாக நடக்கும் கருத்து திணிப்பா..?? சில நாட்களாக இந்நிகழ்ச்சியில் நடக்கும் விவாதங்களை கவனித்தால் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுக்கு பார்வையாளர்களை இழுத்துசெல்லும் படியான விவாதமாகத்தான் இருக்கிறது. மீறி எதிர்கருத்து கூறுவோரை அசிங்கபடுத்தி அடக்கிவிடுவதும் தெரிகிறது. இந்நிகழ்ச்சி/கோபிநாத் தன் கருத்துகளை சமூக கருத்தாக பரப்புரை செய்வதாக தோன்றுகிறது. நிகழ்ச்சியின் போக்கையும், சிறப்பு விருந்தினர்களையும் கவனித்தால் இது என்னவோ Psychological Influencing-Social Media Marketing போல் தோன்றுகிறது. உதாரணமாக: எல்லா நிகழ்ச்சியிலும் தன்னை நடுநிலைவாதி என்று அடையாளப்படுத்திகொள்ளும் திரு கோபிநாத், போன வார அரசியல் தலைப்பில் சாதி கட்சிகள் தவறில்லை என்பன போன்ற வாதங்கள் பெரும் முரண்பாடானவை. இதனை பொதுமக்கள்/சமுதாய கருத்தறியும் பொது விவாத நிகழ்ச்சியாக கருத முடியவில்லை.

  • டாக்டர் வேலையை விட்டுவிட்டு திரைத் துறைக்கு ஏன் வந்தீர்கள் என்று பவர் ஸ்டாரை பார்த்து கேட்ட கோபிநாத் , கண்டக்டர் வேலையை விட்டுவிட்டு திரைத் துறைக்கு ஏன் வந்தீர்கள் என்று சூப்பர் ஸ்டாரை பார்த்து கேட்க்க முடியுமா?
  • உங்க சொந்தக் காசுல உங்க படத்தை ஓட்டறீங்களா என்று பவர் ஸ்டாரை பார்த்து கேள்வி கேட்ட கோபிநாத் , கருணாநிதியை பார்த்து , உளியின் ஓசை , கிழவரின் இம்சை , பெண் சிங்கம் , அசிங்கம் , இளைஞன் , வயோதிகன் , என்றெல்லாம் மக்களை இம்சிக்கும் படங்களுக்கு கதை வசனம் எழுதி சொந்தக் காசு கூட இல்லாமல் ஊர் காசை அடித்து படத்தை ஓட்டுறீங்களா என்று கேள்வி கேட்க்க திராணி இருக்கிறதா ?

    மிகைப்படுத்தி பேசுவதை தவிர எந்த குறையும் இல்லாத மனிதர் பவர் ஸ்டார்...
    எதையும் எதிர்கொள்ளும் மனநிலையும்,
    தோற்றாலும் போராடும் தன்னம்பிக்கையும்,
    கேலி செய்தாலும் பொறுமை மாறாது பதில் சொல்லும் கோணத்திலும் ஒப்பிடும் போது...
    ஒரு டி ஆர் பி ரேட்டிங் கூட்டி காண்பிக்க உபயோகப்படுத்தி , ஒரு மனிதனை வெளிச்சத்தில் இகழ்ச்சி செய்யும் கோபிநாத்& டீமை விட
    பவர் ஸ்டார் சீனிவாசன் எந்த விதத்திலும்
    குறைந்துவிடவில்லை...

    சொந்த காசில் சினிமா எடுத்ததை தவிர தப்பான தொழில் செய்யவில்லை...
    படங்கள் காணாமல் போனாலும் பணம் கொடுக்காமல் ஏமாற்றினார் என்று எந்த புகாரும் இல்லை...
    விஜய் டிவியின் டி ஆர் பி வெறியை விட
    சீனிவாசனின் சினிமா வெறி தவறாக தோன்றவில்லை...

    நான் அவர் படமும் பார்த்தது இல்லை..
    ஏற்றுக்கொள்ள முடியாத நடிகனாக இருக்கலாம்...
    தனிமனிதனாக பவர் ஸ்டார் சீனிவாசன் நல்ல மனிதர் என்பது சத்தியமாக உண்மை என்று மட்டும் நிச்சயம் சொல்ல முடியும்...

    மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
    தனக்காக பிறரை இகழ்ச்சி செய்யும் விஜய் டி வி போல் அல்லாது..

No comments:

Post a Comment